நீச்சல் குளத்தில் அலைமோதும் இளைஞர்கள் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இருக்கக் கூடிய நீச்சல் குளத்தில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.
நீச்சல் குளத்தில் அலைமோதும் இளைஞர்கள் கூட்டம்

தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன, இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை மார்ச் 31ஆம் தேதி முடித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது அந்த வகையில் 1ஆம் தேதியுடன் அனைத்துக் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நீச்சல் குளம் பராமரிப்பு பணி நேற்று நிறைவடையாத காரணத்தினால் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு நீச்சல் குளம் வந்துள்ளது. மெரினா நீச்சல் குளம் 100 மீட்டர் நீளம் கொண்டதாகும், ஒருமணி நேரத்துக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. காலை 5.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை நீச்சல் குளம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை 1மணி நேரம் பெண்களுக்கு என்று நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 400 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்திருக்க கூடிய சூழலில் தற்போது 150 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் இளைஞர்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு இளைஞர்கள் அதிக அளவில் நீச்சல்குளத்தில் விளையாடுவதற்காக வந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தினால் நீச்சல் குளங்களில் இனிவரும் காலங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com