தொடர்ந்து அதிகரித்து வரும் காய்கறிகள் விலை

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் காய்கறிகள் விலை

கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு காய்கறி வினியோகம் செய்யப்படும். அதேபோல கோயம்பேடு சந்தைக்கு அண்டை மாநிலங்களாக இருக்கக்கூடிய கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறி வரத்து இருக்கும். இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை குறைந்து வந்த நிலையில் இன்றும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரு கட்டத்தில் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் வாங்க ஆட்கள் இல்லாமல் கீழே கொட்டும் நிலை இருந்த நிலையில் தற்போது அதிகரிக்கத் தொடங்கியது.

இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய வியாபாரி, சுங்க கட்டணம், பெட்ரோல், டீசல் உயர்வு மற்றும் லாரி வாடகை உயர்வின் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு இயல்பாக வரக்கூடிய லாரிகளின் எண்ணிக்கை குறைந்து காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாக பொதுமக்கள் விவசாயிகள் மிகவும் பாதிப்படைவார்கள்.தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்தால் காய்கறிகள் விளையும் உயர்ந்து கொண்டே இருக்கும் என்றார்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com