மத்திய மோடி அரசின் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பை வெளியிட்டு இருந்தது
இதன் தொடர்ச்சியாக நாடுமுழுவதும் காங்கிரஸார் ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை கோயம்பேடு சின்மயா நகரிலுள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன்பு தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்தழகன் தலைமையில் ஏராளமான காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், இனிவரும் காலங்களில் ஏழை எளிய மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை உபயோகிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதை நினைவு கூறும் விதமாக, பெண்களுக்கு அடுப்பு எரிக்கும் விறகை வழங்கினார். மேலும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.