சென்னை கொளத்தூரில் சர்வதேச தரத்திலான வண்ணமீன் வர்த்தக மையம் அமைய உள்ளது. அதற்கான இடத்தை மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை கொளத்தூரில் சர்சதேச தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதற்கான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.
இப்பகுதியில் வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்கப்பட்டால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் சில்லரை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கும் ஏதுவாக இருக்கும்.
அகத்தீஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தை தேர்வு செய்வது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மீன் மார்கெட் அமைக்கும் பணி சென்னை மாநகராட்சி சார்பில் பணிகளை தொடங்கியுள்ளது. விரைவில் மீன் விற்பனை சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.