20 மண்டலங்களுடன் சென்னை மாநகராட்சி... விரைவில் பணிகள் துவக்கம்!!

சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் எண்ணிக்கை உயர்த்தும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 மண்டலங்களுடன் சென்னை மாநகராட்சி... விரைவில் பணிகள் துவக்கம்!!

சென்னையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி 10 மண்டலங்களும் 155 வார்டுகளும் இருந்தது. பின்னர் மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு மண்டலங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல் வார்டுகளும் 200 ஆக மறு சீரமைப்பு செய்யப்பட்டன. இந்த நிலையில் மாநகராட்சியில் உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகள் மட்டுமே உள்ளன. மற்ற 6 சட்டசபை தொகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. இந்த 6 தொகுதிகளை சென்னை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.

இதனிடையே சென்னை மாநகராட்சியில், சட்டசபை தொகுதிக்கு ஏற்ப மண்டலங்கள் அதிகரிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் நேரு அறிவித்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி 20 மண்டலங்களாக மாற வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து பேசிய மாநகராட்சி அதிகாரிகள், முதற்கட்டமாக, சட்டசபை தொகுதிக்கு ஏற்ப மண்டலங்கள் சீராய்வு செய்யப்பட உள்ளன. மாநகராட்சியில் மணலி மண்டலத்தில் 8 வார்டுகள் மட்டுமே உள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 18 வார்டுகள் உள்ளன. அனைத்து மண்டலங்களிலும் நிர்வாக வசதிக்கு ஏற்ப, வார்டுகள் மறுசீராய்வு செய்யப்படும். மணலி மண்டலத்தில் மணலி, மாதவம், பொன்னேரி உள்ளிட்ட 3 தொகுதிகள் உள்ளன. திரு.வி.நகர் மண்டலத்தில் திரு.வி.நகர், பெரம்பூர், கொளத்தூர், எழும்பூர் உள்ளிட்ட மண்டலங்கள் உள்ளது.

அண்ணா நகர் தொகுதியில் அண்ணா நகர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் உள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரம் விளக்கும், தி.நகர், சேப்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளது. கேடம்பாக்கத்தில் தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன.

வளசரவாக்கம் தொகுதிகயில் மதுரவாயல், ஆலந்தூர் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன. இவ்வாறு ஒரு மண்டத்தில் பல சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இவற்றுக்கு தீர்வு காண மறு சீராய்வு தேவைப்படுகிறது. இந்த மறுசீராய்வில், 5 மண்டலங்கள் கூடுதலாக அமைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் 20 மண்டலங்களுடன் நிர்வாகம் செயல்படும். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com