தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது தென் மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று தரைக்காற்று வீசலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தபோட்டுள்ளது.