ஐஐடியில் சாதி பாகுபாடு பணியை உதறிய உதவி பேராசிரியர்

ஐஐடியில் மீண்டும் சாதிய பாகுபாடு தலைதூக்குவதால் கல்வியாளர்கள் அதிர்ச்சி
ஐஐடியில் சாதி பாகுபாடு பணியை உதறிய உதவி பேராசிரியர்

சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு இருப்பதாக கூறி உதவிப் பேராசியர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதி மற்றும் மத பாகுபாடு காட்டப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாத்திமா லத்தீஃப் என்ற அந்த மாணவிக்கு மத ரீதியாக பல்வேறு தொல்லைகள் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. தனது பெயரைக் கூட சொல்ல முடியவில்லை என்று தற்கொலைக்கு முன்னதாக அந்த மாணவி தனது தாயாரிடம் செல்போனில் அழுததாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது உதவி பேராசியர் ஒருவருக்கு சாதி ரீதியான துன்புறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபின் புதியாதாத் என்றஅந்த உதவி பேராசிரியர் ஐஐடி நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், மாணவர்கள் மற்றும் பேராசியர்கள் மத்தியில் சாதி பாகுபாடு நிலவுவதாகவும், எனவே தனது பணியை ராஜினாமா செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பணியை ராஜினமா செய்த அவர் தற்போது தனியார் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சென்னை ஐஐடியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஜாதி பாகுபாடு கடைபிடிக்கப்பட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த வழக்காரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு காட்டப்படுவது குறித்து தாழ்த்தப்பட்ட பழங்குடியின பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் விபின் புதியாதாத் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் சாதி ரீதியான பாகுபாடே இருக்கக் கூடாது என்பது தான் திமுகவின் நிலைப்பாடு என்றும், ஐஐடியில் சாதி பாகுபாடு இருப்பது தெரியவந்தால் அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஐஐடி நிர்வாகம், சாதி பாகுபாடு இருப்பதாக உதவிப் பேராசிரியர் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தது சரியான நடைமுறை அல்ல.. சரியான நடைமுறைகளின் படி தெரிவித்தால் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கல்வி அனைவருக்கும் பொதுவானது. அரசியலமைப்புச் சட்டமே இதை உறுதி செய்கிறது. இதுவரை சென்னை ஐஐடியில் கல்வி பயிலும் மாணவர்கள் தான் சாதி, மத ரீதியிலான பாகுபாட்டிற்கு ஆளானார்கள் என்றால் இப்போது உதவிப் பேராசியர் ஒருவரே இந்தக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது வேதனையை அளிக்கிறது. எனவே இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் ஒரு உயர்ந்த கல்வி நிறுவனம் அனைவருக்குமானது என்பதை ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

வி நியூஸ் 27 செய்திகளுக்காக சென்னை செய்தியாளர் மாரியப்பன் மற்றும் ராய்....

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com