தொடங்கியது கஞ்சா வேட்டை .. கஞ்சா கடத்திய இளைஞர் அதிரடி கைது

தொடங்கியது கஞ்சா வேட்டை .. கஞ்சா கடத்திய இளைஞர் அதிரடி கைது

உலர்ந்த கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்த வாலிபரை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
Published on

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

பயணி ஒருவரின் பையை சோதனை நடத்தினர். அப்போது பைக்குள் 2 கிலோ கஞ்சா மறைத்து வைத்து இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உலர்ந்த கஞ்சாவை கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் மாதவரத்தைச் சேர்ந்த எபினேசர் என்பது தெரிந்தது.

எங்கே 2 கிலோகஞ்சாவை கடத்தி வந்தார்? யாருக்கு சப்ளை செய்ய உள்ளார்? என்பது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் கைதானவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.

logo
vnews27
www.vnews27.com