அரசுப் பேருந்துகள் நிற்கும் சாலையோர இடைநிறுத்த உணவகங்களுக்கான ஒப்பந்தப் புள்ளியை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. மேலும் அதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவையாக இருக்க வேண்டும் எனவும், உணவகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விலைப்பட்டியல் பலகை அவசியம் என்றும் சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர், எப்போதும் தண்ணீர் வசதியுடன் இலவச கழிப்பிட வசதி வழங்கப்பட வேண்டும் என்றும் பேருந்துகள் நிற்குமிடம் கான்கிரீட் தளமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உணவக வளாகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள், பயணிகளுக்கு இடையூறு மற்றும் புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படக் கூடாது, உணவகம் முன் புகார் பெட்டி, வாங்கும் பொருட்களுக்கு கணினி மூலம் ரசீது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று நெடுந்தூரம் செல்லும் அரசுப் பேருந்துகள் சைவ உணவகங்களில் மட்டுமே பேருந்தை நிறுத்த வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.