பூங்காக்கள் பராமரிப்பு இல்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்க

பூங்காக்கள் பராமரிப்பு இல்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பூங்காக்கள் பராமரிப்பு இல்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்க

சென்னையில் உள்ள பூங்காக்கள் ஒப்பந்தத்தில் உள்ள தரநிலைகளின்படி பராமரிக்கப்படாமல் இருந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் இணை ஆணையர்கள் மாநகராட்சி கடிதம் எழுதி உள்ளது. அதில். சென்னையில் மொத்தமாக 525 பூங்காக்கள்,128 போக்குவரத்து தீவுகள்,118 சென்டர் மீடியன்கள் மாநகராட்சியின் காட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதில் தத்தெடுப்பு மற்றும் ஒப்பந்த முறையில் சென்னையில் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காக்கள்,சென்டர் மீடியன்கள், போக்குவரத்து தீவுகள், சாலையோர பூங்காக்களின் தரத்தை மேம்படுத்தவும் பொது மக்களின் பயன்பாட்டில் அவை இருப்பதை உறுதி செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் இணை ஆணையர்கள் தொடர்ந்து பூங்காக்களின் பராமரிப்பை ஆய்வு செய்ய மாநகராட்சியின் மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய மண்டல இணை ஆணையர்களுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள தரநிலைகளின்படி பூங்காக்கள் பராமரிக்கப்படாமல் இருந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்து சென்னை மாநகராட்சியே பூங்காக்களை கையகப்படுத்தவும் அல்லது விதிகளுக்கு உட்பட்ட முன்வரும் மற்றவர்களுக்கு ஒப்பந்தங்கள் மாற்றி கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தத்தெடுப்பு மற்றும் ஒப்பந்த முறையில் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காக்கள், சென்டர் மீடியன்கள், சாலையோர பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படாமலும், பொது மக்களின் பயன்பாட்டில் அவை இல்லாத வகையில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சென்னை மாநகராட்சி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com