போக்குவரத்து துறையில் எப்போதும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நடந்து கொண்டே வருகின்றன. மனிதர்களின் நவீன தேவைக்கு ஏற்ப பல முன்னேற்றங்கள் இத்துறையில் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அந்தவகையில் சமீப காலங்களாக ஹைபர்லூப் என்ற போக்குவரத்து முறை மிகவும் பேசுப்பொருளாக மாறி வருகிறது.
தற்போது சென்னை ஐஐடி மாணவர்கள் இந்த ஹைபர்லூப் தொழில்நுட்பம் மூலம் 500 மீட்டர் வரை பயணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் அது ஒரு புதிய மையில் கல்லாக அமையும். ஏனென்றால் இந்த முயற்சி வெற்றி அடைந்தால் மிகவும் நீண்ட தூரத்தை எளிதாக குறைவான நேரத்தில் கடந்துவிடலாம். ஆகவே இது மக்களுடைய பயண நேரத்தை குறைக்க உதவும் வகையில் அமைந்துவிடும்.
இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் இனி சென்னை-பெங்களூரு இடையேயான பயண தூரம் 25 நிமிடங்களாக குறைந்துவிடும். அதேபோல் சென்னை-மும்பை இடையேயான பயணம் தூரம் ஒரு மணி நேரமாக குறைந்துவிடும். ஆகவே இந்த முயற்சியில் சென்னை ஐஐடியை சேர்ந்த அவிஷ்கர் ஹைபர்லூப் மாணவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த குழு ஏற்கெனவே 100 மீட்டர் வரை ஹைபர்லூப்பை இயக்கியுள்ளது. அதை தற்போது 500 மீட்டராக உயர்த்த உள்ளது.
ஹைபர்லூப் போக்குவரத்து என்பது மெட்ரோ, மொனொ ரயில்கள் திட்டத்தை விட மிகவும் வேகமாக ஒரு போக்குவரத்து முறை. ஏனென்றால் இந்த முறையில் ஒரு பைப் லைன் தளம் போல் இரு இடங்களுக்கு இடையே வழித்தடம் அமைக்கப்படும். அதற்கு பாட் என்ற கருவி பயணகளுடன் இயக்கப்படும். இந்த பைப் லைன் தளத்தின் உள்ளே காற்று இருக்காத சூழல் உருவாகும். ஆகவே காற்றின்மை காரணமாக உராய்வு ஏற்பட்டு இந்த பாட் கருவி வேகமாக செல்லும்.
அதன்மூலம் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்கு இந்த பாட் கருவி இயங்கும். காற்றின்மை மற்றும் உராய்வு காரணமாக இந்த கருவியின் வேகம் மணிக்கு 1000 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.