தமிழகம் முழுவதும் இன்று 600 இடங்களில் பூஸ்டர்டோஸ் தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று 600 இடங்களில் 9 வது சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று 600 இடங்களில் பூஸ்டர்டோஸ் தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது 60 வயது நிரம்பிய அனைவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தற்போது தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு 9 மாதங்கள் நிரம்பியவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியான முன்கள் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வர வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தமிழக அரசு சார்பில் இனி வரும் ஒவ்வொரு வார வியாழக்கிழமையும் பாஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இன்று 9 வது வாரமாக தமிழகம் முழுவதும் 600 இடங்களிலும் சென்னையில் 160 இடங்களிலும் சிறப்பு புஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முலுவதும்ய் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com