மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு

மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள் அரசுமுறை பயணமாக வெளிமாநிலம் செல்லும் போது முதலமைச்சர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு

இதுகுறித்து அனைத்து அரசுத்துறை செயலாளர்கள், துறைத்தலைவர்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில்

அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாநிலத்திற்குள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் முன் தலைமைச் செயலாளர் மற்றும் துறைசார்ந்த அமைச்சருக்கு பயணத்திட்டத்தை தெரிவிக்க வேண்டும் எனவும்

அரசுத்துறை செயலாளர்கள், மாநிலத்திற்கு வெளியே செல்லும் போது தலைமைச் செயலாளர் மூலமாக முதலமைச்சர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்

துறைத்தலைவர்கள் மாநிலத்திற்குள்ளேயோ அல்லது மாநிலத்திற்கு வெளியேவோ அரசுமுறையாத பயணம் செல்லும் போது அரசு செயலாளர்களிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com