தமிழ்நாடு முழுவதும் 1.37 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை தவணை கடந்தும் செலுத்திக்கொள்ளால் உள்ளனர்
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்,
தமிழகம் முழுவதும் 49.03 (49,03,129) லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 10.52 கோடி (10,52,54,742) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
கோவிஷில்டு - 92.10 லட்சம், கோவாக்சின் - 10.17 லட்சம், கார்பெவாக்ஸ் - 6.85 லட்சம் என நேற்றைய நிலவரப்படி 1.09 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
12 - 14 வயதிற்கு உட்பட்டோருக்கு 14.25 லட்சம் (67.23%) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை தவனை தடுப்பூசி 8.20 லட்சம் (38.04%) செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 3292 கிராம பஞ்சாயத்துகளிலும்,121 நகராட்சிகளிலும் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வாரம் ஒரு நாள் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மட்டுமே 4 கோடி (4,00,34,268) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் 1.37 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை தவணை கடந்தும் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.