நடப்புத் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் அந்த முதலிடத்திற்கு மிக அருகாமையில் இருக்கிறார். இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் கூட யார்க்கர் நடராஜனுக்கு பர்ப்பில் கேப் கிடைத்துவிடும்.
புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார். நாளை பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் நடராஜன் விக்கெட்டை கைப்பற்றினால் சாஹலை பின்னுக்குத் தள்ளி பர்ப்பிள் தொப்பியை தன் வசமாக்கிவிடுவார்.
கேகேஆரின் உமேஷ் யாதவ், டிசியின் குல்தீப் யாதவ் மற்றும் ஆர்சிபியின் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முறையே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களில் உள்ளனர்.