பெண்கள் உலக கோப்பை போட்டி : அரையிறுதியில் நுழையுமா இந்திய அணி !!

பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் மார்ச் 27ம் தேதியுடன் முடிகிறது. அதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
பெண்கள் உலக கோப்பை போட்டி : அரையிறுதியில் நுழையுமா இந்திய அணி !!

ஆஸ்திரேலியா 6 போட்டிகளில் வென்று வென்று 12 புளளிகளுடன், முதல் அணியாகவும், தென் ஆப்ரிக்கா 9 புள்ளிகளுடன் 2வது அணியாகவும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை முதல் அணியாக இழந்துள்ளது. பட்டியலில் ஒரு வெற்றியுடன் 7வது இடத்தில் இருக்கும் வங்கதேசமும் அதே நிலையில்தான் உள்ளது.

பாகிஸ்தானை வென்ற இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்குமுன்னேறியுள்ளது. அடுத்து வங்கதேசத்தை வென்றால் 8 புள்ளியுடன் அரையிறுதியை எளிதில் உறுதி செய்யும். வெஸ்ட் இண்டீஸ்தான் முதல் அணியாக 7 ஆட்டங்களிலும் விளையாடி 7 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளில் ஏதாவது ஒன்று அடுத்த ஆட்டத்தில் தோற்றால் வெ.இண்டீஸ் அரையிறுதியில் விளையாடும். இந்தியா இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 6 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றிப் பெற்றால் இந்தியாவும் அரையிறுதியை உறுதி செய்யும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com