பெண்கள் உலகக்கோப்பை: அரையிறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

பெண்கள் உலகக்கோப்பை: அரையிறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

பெண்கள் உலகக்கோப்பை போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் இங்கிலாந்து -வங்காளதேச அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோபியா டங்லீ 67 ரன்கள் குவித்தார்.

235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணியில் அதிகபட்சமாக லதா மோண்டல் 30 ரன்கள் குவித்தார்.

48 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3-வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com