பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்:நியூசிலாந்திடம் வீழ்ந்த பாகிஸ்தான்!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்:நியூசிலாந்திடம் வீழ்ந்த பாகிஸ்தான்!

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து பெண்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் எதிரணியுடன் தோற்கும் பட்சத்தில், நியூசிலாந்து அணிக்கு அரையிறுதி செல்வதற்கான அதிர்ஷ்டம் அமையலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com