கடைசி போட்டியிலும் வெற்றி : கண் கலங்கி விடைப்பெற்றார் ரோஸ் டெய்லர் !!

கடைசி போட்டியிலும் வெற்றி  : கண் கலங்கி விடைப்பெற்றார் ரோஸ் டெய்லர்  !!

நியூசிலாந்து-நெதர்லாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 333 ரன்கள் எடுத்தது. வில் யங் 120 ரன்களும் கப்தில் 106 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியினர் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஸ்டீபன் மைபர்க் மட்டுமே சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். இறுதியில் நெதர்லாந்து அணி 42.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்த போட்டி நியூசிலாந்து அணி வீரரான ரோஸ் டெய்லருக்கு கடைசி போட்டியாகும். இந்த தொடருடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

போட்டி தொடங்குவதற்கு முன்னாதாக நியூசிலாந்து அணியின் தேசிய கீதம் ஒலித்தது. நியூசிலாந்து அணி வீரர்களுடன் டெய்லரின் குழந்தைகளும் அதில் இடம்பெற்றனர். அப்போது டெய்லர் கண் கலங்கியபடி பாடினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com