ஐசிசியின் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதை பெற்றவர்கள் !!

ஆஸ்திரேலியா பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்டருமான அலிசா ஹீலி ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி-யின் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரர்களின் பரிந்துரை பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சிமோன் ஹார்மர், ஓமன் பேட்டர் ஜதீந்தர் சிங் ஆகியோர் இடம்பிடித்தனர்.

இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான விருது பட்டியலில் ஆஸ்திரேலியா பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான அலிசா ஹீலி, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் நடாலி ஸ்கிவர் மற்றும் உகாண்டா ஆல்-ரவுண்டர் ஜேனட் எம்பாபாசி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது. சொந்த மண்ணில் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தினார் கேசவ் மகாராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com