ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடக்குமா : முன்னாள் கேப்டன் ரணதுங்கா பதில் !!

ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடக்குமா : முன்னாள் கேப்டன் ரணதுங்கா பதில் !!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 14 ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 7 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

இலங்கை 5 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன. கடைசியாக 2018-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை (ஒரு நாள் போட்டி) ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இதில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.

15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியாக இலங்கையில் நடத்தப்படுவது இந்த போட்டி ஆகஸ்ட் 17-ந் தேதி முதல் செப்டம்பர் 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி இருப்பதால் ஆசிய கோப்பை போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் ஆசிய கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது உறுதி இல்லை . மற்ற நாடுகளை நம்பி இருக்க வேண்டி உள்ளது. மக்களின் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிராக இருக்கிறது

கிரிக்கெட்டுக்கு எதிராக அவர்களது மனநிலை இல்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலே இலங்கையில் இருந்து இந்த போட்டியை மாற்ற முடிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com