இந்திய அணிக்கு புதிய கேப்டன் யார்? லிஸ்டில் இருக்கும் 4 பேர் !!

இந்திய அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்து ஐபிஎல் சீசனுக்கு பிறகு தெரிந்துவிடும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு புதிய கேப்டன் யார்? லிஸ்டில் இருக்கும் 4 பேர் !!

விராட்கோலி விலகலை அறிவித்த பிறகு, ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வருகிறது இந்திய அணி. இந்நிலையில், இந்திய அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்து பேசிய ரவி சாஸ்த்ரி, பிசிசிஐ இம்முறை ஐபிஎல் அணிக்கு தலைமை தாங்கும் நபர்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார். ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் மீது தற்போது கவனம் திரும்பியுள்ளதாக ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.

இதில் ரிஷப் பண்ட்க்கு கிரிக்கெட் அறிவு அதிகம் இருப்பதாக பாராட்டிய ரவி சாஸ்த்ரி, அடுத்த கேப்டன் குறித்து முடிவு செய்ய தேர்வுக்குழுவினருக்கு நடப்பு ஐபிஎல் தொடர் நல்ல வாய்ப்பாக அமையும் என்று ரவி சாஸ்த்ரி விளக்கம் அளித்துள்ளார். உலகக் கோப்பை தொடர் இன்னும் 4 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதை ரவி சாஸ்த்ரி குறிப்பிட்டார்.

வேகப்பந்துவீச்சு இதனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசும் வீரர்களை தேர்வுக்குழுவினர் கவனிப்பார்கள் என்றும் ரவி சாஸ்த்ரி குறிப்பிட்டார். கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவதாகவும், அவர் 5 ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது பெரும் சாதனை என்றும் ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com