ரெய்னா மறைமுகமாக யாரை சாடுகிறார்?

ரெய்னா மறைமுகமாக யாரை சாடுகிறார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஐபிஎல் சீசனின் தொடக்க இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. ஐபிஎல் 2022-ன் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் பெரும் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நான்கு முறை வெற்றி பெற்ற அணிக்கு இப்போது பெரும் கவலையாக இருப்பது அவர்களின் பந்துவீச்சு. சி.எஸ்.கே அணியின் முக்கிய பவுலர் தீபக் சாஹர் காயத்தில் இருப்பதால் அணிக்கு பின்னடைவாக உள்ளது. முக்கிய கட்டத்தில் பந்து வீச சரியான பவுலர் இல்லாமல் திணறி வருகிறது.

இதற்கிடையில், போட்டி முடிந்த பிறகு, முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸின் சுரேஷ் ரெய்னா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு ட்வீட் செய்தார்.

அவரது ட்வீட்டில், சுரேஷ் ரெய்னா தனது படத்தை பகிர்ந்து "ஒவ்வொரு சூழ்நிலையிலும் நல்லதைப் பார்க்க உங்கள் மனதைப் பயிற்றுவிக்கவும்" என்று பதிவிட்டு இருந்தார். மற்றொரு ட்வீட்டில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி பற்றிய தனது எண்ணங்களையும் ரெய்னா பகிர்ந்து கொண்டார்.

அதில் ரெய்னா இரு அணிகளின் செயல்பாடுகளையும் பாராட்டினார். “இரு அணிகளுக்கும் சிறப்பான ஆட்டம். கிரிக்கெட்டில் இன்னொரு நாள் நமக்கு கற்றுத் தந்த விளையாட்டு எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும், புன்னகையுடன் கடினமாக உழைக்க வேண்டும். நம்பமுடியாத வெற்றிக்கு LSG வாழ்த்துக்கள்″ என்று கூறி இருந்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com