ஐ.பி.எல். இறுதிப்போட்டி எங்கு நடக்கிறது?

ஐ.பி.எல்.இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் மே 29-ந்தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிளே ஆப் சுற்று 2 இடங்களில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருக்கிறது.
ஐ.பி.எல். இறுதிப்போட்டி எங்கு நடக்கிறது?

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி மராட்டிய மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா பாதுகாப்பு காரணமாக மும்பையில் உள்ள வான்கடே, பிரா போர்ன், டி.ஒய்.பட்டீல் மற்றம் புனே ஆடிய 4 மைதானங்களில் மட்டும் போட்டி நடைபெற்று வருகிறது.

மே 22-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது. லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதிபெறும் பிளே ஆப் சுற்றுக்கான தேதி, இடம் இதுவரை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஐ.பி.எல். இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் மே 29-ந்தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிளே ஆப் சுற்று ஆட்டங்களை 2 இடங்களில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருக்கிறது.

அதன்படி குவாலிபைபர் 1 மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடத்தப்பட இருக்கிறது. குவாலிபைபர் 2 மற்றும் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறலாம்.

புதிய அணிகளில் ஒன்றான அகமதாபாத்துக்கு வாய்ப்பு அளிக்கும் போது மற்றொரு புதுமுக அணியான லக்னோவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் லக்னோவிலும் பிளேஆப் சுற்று நடத்தப்படலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com