இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 6 போட்டிகளில் இதுவரை விளையாடவுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து உம்ரான் மாலிக் விரைவில் இந்திய அணிக்கு விளையாடுவார் என முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-ஐதராபாத் வீரர் உம்ரான் மாலிக் தனது வேகத்தாலும், பந்துவீசும் நுணுக்கத்திலும் அனைவரையும் கவர்கிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒருநாள் நிச்சயமாக இந்திய அணிக்கு உம்ரான் மாலிக் விளையாடுவார். மற்ற வீரர்கள் அவரைப்போல 150 கி.மீ வேகத்துக்கு பந்துவீசினால் பந்து வைட்டை நோக்கி செல்வதற்கு வாய்ப்பு அதிகம்.
ஆனால் அவர் குறைந்த அளவே வைட் பந்துக்களை வீசுகிறார். லெக் சைட்டில் அவர் வைட் பந்துக்களை கட்டுப்ப்படுத்தினா. மிகச்சிறந்த பந்துவீச்சாளராக வருவார். இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.