இந்திய அணியில் சேரும் வாய்ப்பு கேள்விக்குறி

யோயோ டெஸ்டில் தோல்வி அடைந்த பிரித்வி ஷா !!
இந்திய அணியில் சேரும் வாய்ப்பு கேள்விக்குறி

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் மிகப்பிரம்மாண்டமாக மார்ச் 26 ஆம் தேதி மும்பை வான்கடேவில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் 10 நாள் பயிற்சி பெறுமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. இதனால் 25 இந்திய வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியில் கலந்து கொண்டனர். இதில் வீரர்களின் உடல் தகுதி சரிபார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் பிரபல இளம் வீரர் இந்த டெஸ்டில் தோல்வியடைந்துள்ளார்.

மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனும், டெல்லி கேப்பிடல்ஸ் பேட்ஸ்மேனுமான பிரித்வி ஷா தான் அந்த வீரர். யோ-யோ டெஸ்டில் பங்கேற்ற அவர் தோல்வியடைதுள்ளார். இருப்பினும், அவர் ஐபிஎல் 2022ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. சில காலமாக மோசமான ஃபார்ம் மற்றும் பிட்னஸைக் கொண்டிருக்கும் பிரித்திவி ஷா, இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே அவருக்கான நிரந்தர இடம் என்பது இல்லை. அவ்வப்போது வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தநிலையில், யோயோ டெஸ்ட் தோல்விக்குப் பிறகு, இனி வரும் போட்டிகளுக்கு அவருடைய பெயர் பரிசீலனையில் கூட இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com