ஹாக்கி அணிகளுக்கு சிறந்த உடற்பயிற்சி கூடம் ... அமைச்சர் சி.வி மெய்யநாதன் சூப்பர் தகவல்!!

ஹாக்கி அணிகளுக்கு சிறந்த உடற்பயிற்சி கூடம் அமைத்து தரப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வி மெய்யநாதன் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வி மெய்யநாதன்
விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வி மெய்யநாதன்

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் 12 அணிகள் பங்கேற்கும் ஊடகவியலாளர்களுக்கான கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவி மெய்யநாதன் கலந்துகொண்டு கிரிக்கெட் விளையாடி (பேட்டிங் மற்றும் பௌலிங் செய்து) போட்டியினை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். ஊடகவியலாளர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளை துவக்கி வைத்ததில் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

செஸ் ஒலிம்பியாட் மற்றும் சர்வதேச டென்னிஸ் போட்டி உள்ளிட்டவை தமிழ்நாட்டில் நடக்க உள்ளது பெருமைக்குரிய ஒன்று, சர்வதேச டென்னிஸ் போட்டியில் எந்தந்த அணிகள் பங்கேற்கும் என்பது குறித்தான அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும்.

மேலும் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளதால் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் 3 மாதங்களில் மறு சீரமைப்பு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் இருந்து இரண்டு ஹாக்கி வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஹாக்கி அணிகளுக்கு சிறந்த உடற்பயிற்சி கூடம் அமைத்து தரப்படும். உடற்பயிற்சியாளர்கள் இல்லாத அணைகளுக்கு உடற்பயிற்சியாளர்கள் நியமிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com