ஓய்வை அறிவித்த டென்னிஸ் வீராங்கனை ஆஷ் பார்டி

மகளிர் டென்னிஸ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லெய்க் பார்டி.
ஓய்வை அறிவித்த டென்னிஸ் வீராங்கனை ஆஷ் பார்டி

பார்டி விளையாடியுள்ள டென்னிஸ் தொடர்களில் இதுவரை 15 முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 2019ம் ஆண்டு விம்பிள்டன் மற்றும் 2021ம் ஆண்டில் ஃப்ரெஞ்ச் ஓபன் என அடுத்தடுத்து கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ஆஷ் பார்டி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் தனது 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். புகழின் உச்சத்தில் இருக்கும் போது தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், வாழ்கையில் எனக்கு பல கனவுகளை துரத்தில் சாதிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் இதற்கு மேலும், என்னால் முடியாது என நினைக்கிறேன். ஏனென்றால் பயணங்கள் என்னை சோர்வடைய செய்துவிட்டன.

வாழ்கையின் 2வது பாதி குடும்பத்தினர் மற்றும் எனது வீடு தான் மிகவும் பிடித்தவை. அவர்களை இனியும் நீண்ட நாட்கள் பிரிந்திருக்க முடியாது என்பதால் தான் இந்த முடிவை எடுத்தேன். இதற்காக டென்னிஸ்ஸின் மீதான காதல் குறையாது. என் வாழ்வில் மிகப்பெரிய பங்காக டென்னிஸ் தான் இருந்து வருகிறது. இனி மற்றொரு பங்கை வாழ போகிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்த 2வது ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ் பார்டி ஆவார். இவர் கடந்த 2 ஆண்டிற்கும் மேலாக தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர் 2016ல் மீண்டும் டென்னிஸ் விளையாட்டிற்கு வந்து முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com