தமிழக வீரரின் அதிரடி ஆட்டம் : சிக்கலில் மாட்டுமா சி.எஸ்.கே. !!

தமிழக வீரரின் அதிரடி ஆட்டம் :  சிக்கலில் மாட்டுமா சி.எஸ்.கே. !!

15வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி முதல் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது. 26ஆம் தேதி முதல் துவங்கும் இதில் பங்கேற்கும் அணிகள் இறுதிக் கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், XI அணியை தேர்வு செய்வதற்காக பல அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து விளையாடி வருகின்றன

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வரும் 26ஆம் தேதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளதால், லெவன் அணியை தேர்வு செய்ய, வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதினார்கள். இதில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயர் வெறும் 47 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 87 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். கடந்த சீசனில் விட்ட இடத்தை இந்த சீசனிலும் தொடர்கிறார் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த சீசனில், இரண்டாவது பாதி ஆட்டங்களின்போது கொல்கத்தா அணியில் இணைந்த இவர் துவக்கம் முதலே அபாரமாக விளையாடி, அணியில் நிரந்தர இடம் பிடித்தார். இறுதிப் போட்டியில்கூட சிஎஸ்கேவுக்கு சவால் விடும் வகையில் சிறப்பாக விளையாடினார்.

இவரை வீழ்த்தியதால்தான், சிஎஸ்கேவால் கோப்பை வெல்ல முடிந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் முரட்டு பார்முடன் சிஎஸ்கேவுக்கு எதிராக விளையாட உள்ளதால், இவரை சமாளிக்க சிஎஸ்கே திணறும் எனக் கருதப்படுகிறது.

இந்தாண்டு ஐபிஎல் தொடர், டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வுக்கும் முக்கிய அடித்தளமாக இருக்கப் போகிறது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு இதுதான் பெரிய வாய்ப்பாக உள்ளது. எனவே இதே ஃபார்மில் வெங்கடேஷ் ஐயரும் தொடர்ந்தால், இந்திய தேர்வுக்குழுவின் கவனத்தை பெறுவார். இந்த 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு நிச்சயம் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்பதால், வெங்கடேஷ் ஐயர் முதல் போட்டி முதலே, அபாரமாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com