தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம், காமராஜ் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் தமிழ்நாடு மாநில செஸ் சாம்பியன்சிப் போட்டிகள் ஏப். 2 ஆம் தேதி இன்று தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இப்போட்டிகளை பன்னாட்டு நடுவர் அனந்தராமன் துவக்கி வைத்தார்.
காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற இப் போட்டியானது ராபிட் எனப்படும் விரைவுப் போட்டி, பிளிட்ஸ் எனப்படும் அதிரடிப் போட்டி ஆகிய இரண்டு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 6 முதல் 80 வயது வரையிலான 200க்கும் மேற்ப்பட்ட வீர - வீரங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். போட்டிகள் சுவிஸ் முறையில் 9 சுற்றுகளாக நடைபெறுகிறது
இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அடுத்த மாதம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெறும் தேசிய ராபிட் போட்டிகளில் பங்கு பெற தமிழகத்தில் இருந்து விளையாட தகுதி பெறுவார்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செஸ் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்போட்டிகள் தூத்துக்குடியில் நடைபெறுவதாக பன்னாட்டு நடுவர் அனந்தராமன் தெரிவித்தார்.