
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான்- அனிஷ் பன்வாலா ஜோடி 17-7 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.
இதன்மூலம் பதக்கப் பட்டியலில் 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
இதேபோன்று 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களுடன் நார்வே 2-வது இடத்தையும், 3 தங்க பதக்கங்களுடன் ஃபிரான்ஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. துப்பாக்கி போட்டியில் தங்கம் வென்றவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.