ஐ.பி.எல். தொடரில் (13.04.2022)அன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது. நேற்று நடந்த போட்டியில் மும்பை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அணியின் மற்ற வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25% அபராதம் செலுத்த வேண்டும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் மும்பை அணிக்கு விதிக்கப்படும் 2-வது அபராதம் இதுவாகும்.
முதல் போட்டியிலேயே டெல்லிக்கு எதிராக மும்பை அணி மெதுவாக பந்துவீசி இருந்தது. இதற்காக ரோகித் சர்மாவுக்கு மட்டும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சூழலில் 2வது முறையாக மீண்டும் தவறு செய்ததால் அவர் மீதான நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் விதிமுறைகளின் படி ஒரு அணி 3-வது முறையாக பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அந்த அணியின் கேப்டன் 1 போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.
மும்பை அணி 2-முறை இந்த தவறை செய்துள்ள நிலையில் மீண்டும் இதே தவறு நிகழ்ந்தால் மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம்.