ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி- வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார் பிவி சிந்து !!

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்து வருகிறது
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி- வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார் பிவி சிந்து !!

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஹீ பிங் ஜியோவை (சீனா) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அகானா யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் யமாகுச்சியிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் சிந்து வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்.இதனையடுத்து ஜப்பான் வீராங்கனை யமாகுச்சி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com