ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த பாட் கம்மின்ஸ் !!

ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த பாட் கம்மின்ஸ் !!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து கம்மின்ஸ் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டார். டேனியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் கம்மின்ஸ் தனியொருவராக 35 ரன்கள் குவித்து 14 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதே ஓவரில் கொல்கத்தா அணி 162 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காம்ல் இருந்தார். இந்த போட்டியில் அவர் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஐ.பி.எல்.லில் புதிய சாதனை படைத்தது குறித்து கம்மின்ஸ் கூறியதாவது:-

இந்த சீசனில் நான் பங்கேற்ற முதல் ஆட்டத்திலேயே அதிரடியான விளையாடியது ஆச்சரியமானது. பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்தவுடன் இந்த ஆட்டம் இருந்தது. என்னால் அதிகமாக யோசிக்க கூட முடியவில்லை. உண்மையிலேயே எனது ஆட்டம் திருப்தி அளிக்கிறது.

நான் அடித்த பந்துகள் பறந்தன. எனது ஷாட்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. புதிய சாதனை புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டை போலவே அணியின் முக்கிய இடத்தை பிடித்திருப்பது அதிர்ஷ்டம்தான். ஒட்டுமொத்தத்தில் மிகவும் சந்தோ‌ஷம் அடைகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com