
வருகிற 10-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்றுள்ளன.
‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக ஆண்கள் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியை சந்தித்தது. அபாரமாக ஆடிய தமிழக அணி 85-47 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
தமிழக அணியில் பாலதனேஷ்வர் 15 புள்ளிகளும், அரவிந்த் 14 புள்ளிகளும் எடுத்தனர்.
பெண்கள் பிரிவில் தமிழக அணி தனது முதல் லீக்கில் (‘ஏ’ பிரிவு) 62-100 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வேயிடம் தோல்வியை தழுவியது.