மும்பை இந்தியன் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் !!

ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் சூர்யகுமார் யாதவ் கை பெருவிரலில் காயம் அடைந்ததால் முதல் 2 லீக் ஆட்டங்களை தவற விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் !!

நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் 8 ஆட்டங்களில் ஆடி 3 அரைசதத்துடன் 303 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் இடதுகையின் தசைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டி தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த 6-ந் தேதி நடந்த ஆட்டத்தின் போது சூர்யகுமார் யாதவ் காயமடைந்தார். அவரது உடல் நிலைமை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உடல் தகுதிநிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், நேற்றைய ஆட்டத்திற்கு முன் அவரை அணியில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்தது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com