ஜம்சேத்பூரில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி... தமிழக அணியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டிகளில் கலந்துகொள்ள ஜம்சேத்பூர் செல்லும் தமிழக ஹாக்கி அணி வீரர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழியனுப்பி வைத்தார்.
மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்கள் கலந்துக்கொள்ளும் தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டிகள் ஜாம்ஷெட்பூரில் இந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆக்கி அகாடமி அணி சார்பில் தமிழக வீரர்கள் 18 பேர் ரயில் மார்க்கமாக ஜம்ஷெட்பூர் சென்றனர்.

அதற்கு முன்னதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் வீரர்களை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கு சீருடைகளை வழங்கி வெற்றியுடன் வர வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தார்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com