மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ் !

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
கார்லஸ் அல்காரஸ்
கார்லஸ் அல்காரஸ்

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டு விளையாடினார்.

இந்த போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இதையடுத்து நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் கார்லஸ் அல்காரஸ் உடன் ஸ்வெரெவ் மோதினார்.

62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கார்லஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்டில் நடப்பு சாம்பியனான வெரெவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com