கொரிய ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த் !!

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கொரிய ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்  !!

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் சன்சியான் நகரில் பால்மா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

5-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ,தென் கொரியாவின் சன் வன்ஹோ ஆகியோர் மோதினர்.

காலிறுதியில் தென் கொரிய நாட்டு வீரர் சன் வன்ஹோவுக்கு எதிராக விளையாடினார். ஆட்டத்தின் முதல் செட்டை 21-12 என சுலபமாக கைப்பற்றினார் ஸ்ரீகாந்த். இருப்பினும் இரண்டாவது செட்டில் ஆர்ப்பரித்து எழுந்தார் வன்ஹோ.

அந்த செட்டை 18-21 என்று புள்ளிகள் கணக்கில் இழந்தார் ஸ்ரீகாந்த். இரண்டாவது செட்டிலும் 21-12 என வென்றார் ஸ்ரீகாந்த். அதோடு ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் வீரராக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி தடம் பதித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனைக்கு எதிராக விளையாடி வருகிறார். முதல் செட்டில் சிந்து முன்னிலை பெற்றுள்ளார்.

அதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணையர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com