கொரியா ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு தகுதி

கொரியா ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு தகுதி

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சன்சியோன் நகரில் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான இன்று இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் தனது முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் லாரன்லாமுடன் மோதினார்.

இதில் பி.வி. சிந்து 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். பி.வி.சிந்து 2-வது சுற்றில் ஜப்பானின் ஓஹோரியுடன் மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீ காந்த் முதல் சுற்று ஆட்டத்தில் மலேசியாவின் டேரன் லியூவுடன் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 22-20, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com