யாருப்பா மும்பை இண்டியன்ஸ் ஃபீல்டிங் கோச்.. இப்படி ஃபீல்டிங் பண்ணா 199 இல்லை 299 கூட அடிக்கலாம்.

Mumbai Indians fielding
Mumbai Indians fielding PC

ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. தொடர்ச்சியாக 5 தோல்விகளைச் சந்தித்த மும்பை அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெறும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு தோல்வியை பரிசாக அளித்தது மும்பை அணி

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்னோ அணியினர் மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.

ஸ்கோர் ஏறிக்கிட்டே போது எதாவது பண்ணுங்கன்னு ரோஹித் சர்மா பவுலர்களுக்கு கட்டளையிட பவுலர்களும் சிறப்பாக பந்து வீச முயற்சி பண்ணும் போது பவுண்டரி லைனில் நின்ற எல்லா ஃபீல்டர்களும் பந்துகளை கோட்டைவிட லக்னோவின் ஸ்கோர் மளமளவென எகிறியது.

ஒன்னு ரெண்டுன்னா பரவாயில்லை. ஆனால் பீல்டிங்கில் கோட்டை விட்டதால் மட்டும் 8க்கும் மேற்பட்ட பவுண்டர்கள் லக்னோவிற்கு போனசாக கிடைத்தது. கைக்கு வந்த பந்துகளை அலேக்காக பவுண்டரிக்கு தள்ளிவிட்டு எதிரணியை குஷிப்படுத்தும் அற்புதக் காட்சிகளை மட்டும் மும்பை இந்தியன்ஸ் செய்யாமல் இருந்திருந்தால் 160 முதல் 170 ரன்களுக்குள்ளாக லக்னோவை கட்டுப்படுத்தியிருக்க முடியும்

ஒருவேளை இது நடந்திருந்தால் மும்பை இந்தியன்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கும். அடுத்த போட்டிக்கு வருவதற்கு முன்னாடி மும்பை வீரர்களுக்கு பந்தை பிடிக்க கத்துக் குடுத்து அனுப்புங்க பயிற்சியாளரே…

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com