ஐபிஎல் போட்டிகள் : முதல் வாரத்தில் விளையாடாத வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் போட்டிகள் : முதல் வாரத்தில் விளையாடாத வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் இன்னும் ஒரே வாரம் இருப்பதால் தொடங்குவதால் அனைத்து அணிகளும் அதற்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. ஐபிஎல் தொடங்கும் நேரத்தில் சில சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடப்பதால், அந்த தொடர்களில் ஆடும் சில வீரர்கள் ஐபிஎல்லில் முதல் வாரத்தில் ஆட வாய்ப்பில்லை.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடப்பதால், ஆரோன் ஃபின்ச், பாட் கம்மின்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய வீரர்கள் ஐபிஎல் முதல் வாரத்தில் ஆடமாட்டார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையேயான தொடரில் ஆடிவரும் கைல் மேயர்ஸ், அல்ஸாரி ஜோசஃப் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவும் ஆட வாய்ப்பில்லை.

ஐபிஎல் 15வது சீசனில் முதல் வாரத்தில் ஆட வாய்ப்பில்லாத வீரர்கள்:

1. பாட் கம்மின்ஸ் (கேகேஆர்)

2. ஆரோன் ஃபின்ச் (கேகேஆர்)

3. க்ளென் மேக்ஸ்வெல் (ஆர்சிபி)

4. ஜோஷ் ஹேசில்வுட் (ஆர்சிபி)

5. மார்கஸ் ஸ்டோய்னிஸ் (லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்)

6. கைல் மேயர்ஸ் (லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்)

7. அல்ஸாரி ஜோசஃப் (குஜராத் டைட்டன்ஸ்)

8 . ஜானி பேர்ஸ்டோ (பஞ்சாப் கிங்ஸ்)

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com