ஐ.பி.எல். போட்டியின் முடிவில் நிறைவு விழா? : பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் !!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முடிவின்போது நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டியின் முடிவில் நிறைவு விழா? : பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் !!

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆரம்ப நிகழ்ச்சியும், நிறைவு விழாவும் நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்து வருவதால் இந்த ஆண்டு நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்த ஆண்டின் கடைசி ஐபிஎல் போட்டி மே 29-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. அன்று நிறைவு நிகழ்ச்சி நடத்துவதற்கு மேடை ஏற்பாடு செய்ய நிறுவனங்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ப்ரோபசல் ஆவணம் ரூ.1 லட்சத்திற்கு வழங்கப்படுகிறது. ஏப்ரல் 25 வரை இந்த ப்ரோபோசல் ஆவணம் கிடைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2022 லீக்போட்டிகள் மராட்டியத்தின்மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டுவருகின்றன.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பார்வையாளர்கள் குறைந்த அளவிலேயே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பிளே-ஆஃப் தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com