இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட்

109 ரன்களுக்கு சுருண்டது இலங்கை
இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட்

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நேற்று தொடங்கியது . இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட்டுக்களை இழந்து 252 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியமால் தடுமாறியது . முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 30 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது

இதனை தொடர்ந்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த இலங்கை 35.5 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை இழந்து 109 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்தார்

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்க்சில் விளையாடி வருகிறது

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com