2023ல் நடைபெறும் உலக கோப்பை ஹாக்கி : ரூர்கேலாவில் மிகப்பெரிய ஸ்டேடியம் அமைக்கும் ஒடிசா அரசு !!

2018ம் ஆண்டு நடந்த உலக கோப்பை ஆடவர் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் கொரோனா பெருந்தொற்று பரவலையடுத்து உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படவில்லை.

இதுபற்றி ஒடிசாவின் விளையாட்டு செயலாளர் வினீல் கிருஷ்ணா கூறும்போது, ஒடிசாவில் ஆக்கி போட்டி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான எண்ணற்ற பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இதற்காக புவனேஸ்வரில் கலிங்கா ஆக்கி ஸ்டேடியத்தில் மேம்பாட்டு பணிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. இதேபோன்று, சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டா பெயரில் சர்வதேச ஆக்கி ஸ்டேடியம் ஒன்று 20 ஆயிரம் இருக்கை வசதிகளுடன் ரூர்கேலா நகரில் அமைய உள்ளது. இது இந்தியாவின் மிக பெரிய ஆக்கி ஸ்டேடியம் ஆக இருக்கும்.

இந்த ஆண்டு அக்டோபருக்குள் தயாராகும் வகையில் கட்டுமான பணியில் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 250க்கும் கூடுதலானோர் பணியாற்றி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com