இன்று தொடங்குகிறது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி !!

15 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இன்று தொடங்குகிறது.
இன்று தொடங்குகிறது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி !!

9-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் இன்று முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 15 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ‘ஏ’ பிரிவில் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா, ஜிம்பாப்வே, ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா ‘சி’ பிரிவில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, தென் கொரியா, உருகுவே, ஆஸ்திரியா, ‘டி’ பிரிவில் ஜெர்மனி, இந்தியா, மலேசியா, வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டிக்கு தகுதி பெற்றிருந்த உக்ரைன் போர் காரணமாக விலகி விட்டது குறிப்பிடத்தக்கது.

தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா, நெதர்லாந்து-அமெரிக்கா, கனடா-ஜிம்பாப்வே, தென் கொரியா-உருகுவே, அர்ஜென்டினா-ஆஸ்திரியா அணிகள் மோதுகின்றன.

சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் நாளை வேல்சையும், 3-ந் தேதி ஜெர்மனியையும், 5-ந் தேதி மலேசியாவையும் எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com