குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி : ராகுல் திவேதியாவை பாராட்டி தள்ளிய ஹர்திக் பாண்ட்யா !!

குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி : ராகுல் திவேதியாவை பாராட்டி தள்ளிய ஹர்திக் பாண்ட்யா !!

மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராகுல் திவேதியா ஆட்டத்தின் கடைசி 2 பந்தில் 2 சிக்சர் அடித்து குஜராத்தை வெற்றி பெற வைத்தார். சுப்மன்கில் 59 பந்தில் 96 ரன்னும் (11 பவுண்டரி, 1சிக்சர்) தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 30 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 18 பந்தில் 27 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

அந்த அணி மட்டும் தான் இதுவரை தோல்வி அடையவில்லை. வெற்றி குறித்து குஜராத் டைடன்ஸ் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

ஆட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்ததால் நான் நடுநிலையாகி விட்டேன். ராகுல் திவேதியாவுக்கு எனது வாழ்த்துக்கள். நெருக்கடியில் அவர் கடைசி 2 பந்தில் 2 சிக்சர் அடித்தது பாராட்டத்தக்கது. சுப்மன்கில் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவருக்கு சாய் சுதர்சன் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரது பொறுப்பான பேட்டிங்கால் தான் எங்களால் கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்து வர முடிந்தது. இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com