பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா, கிரெஜ்சிகோவா தோல்வி !!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா, கிரெஜ்சிகோவா தோல்வி !!

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 5-7, 4-6 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

இதேபோல் நடப்பு சாம்பியன் பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 6-1, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் 19 வயது பிரான்ஸ் வீராங்கனை டியானி பாரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-0 என்ற நேர்செட்டில் உக்ரைனின் லிசியா சுரெங்காவை எளிதில் தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். ஆன்ட்ரியா பெட்கோவிச் (ஜெர்மனி), விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர்.அடியெடுத்து வைத்தனர்.

ஆண்கள்ஒற்றையர்பிரிவில்முதல்சுற்றுஆட்டம்ஒன்றில் 21 கிராண்ட்ஸ்லாம்பட்டம்வென்றவரானஸ்பெயின்வீரர்ரபெல்நடால் 6-2, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை ஊதித்தள்ளி 2-வதுசுற்றுக்குமுன்னேறினார்.

மற்றொருஆட்டத்தில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் சுவிட்சர்லாந்துவீரர் வாவ்ரிங்கா 6-2, 3-6, 6-7 (2-7), 3-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர்காரென்டின் முடெட்டிடம் வீழ்ந்தார்.இங்கிலாந்து வீரர்கள் கேமரூன் நோரி, டேனியல் இவான்ஸ் வெற்றி பெற்றனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com