
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 6-ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜாபியரை (துனிசியா), தரவரிசையில் 52-வது இடத்தில் உள்ள மேக்டா லினெட் (போலந்து) 3-6, 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் போராடி சாய்த்தார். இந்த ஆட்டம் 2 மணி 28 நிமிடங்கள் நீடித்தது.
மாட்ரிட் ஓபன் சாம்பியனான ஜாபியர் பிரெஞ்ச் ஓபனை வெல்லும் வாய்ப்பில் இருப்பதாக கணிக்கப்பட்டு இருந்தார். ஆனால் முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 2016-ம் ஆண்டு சாம்பியனுமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-2, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் கனேபியிடம் (எஸ்தோனியா) தோற்றார்.