ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாட்டில் பல்வேறு போட்டிகளில் 18 படகு போட்டி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அரசு செலவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்ததாவது :
இந்தாண்டு நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டுக்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2022 உள்ளிட்ட பல்வேறு போட்டிளுக்கான பயிற்சிகள் மற்றும் உத்திகளை வெளிநாட்டு பயணங்கள் மூலம் அறிந்த கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
12 தடகள வீரர்களைக் கொண்ட இந்திய தடகள அணி, இரண்டு பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு பணியாளர் உள்ளிட்டோர் பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ஏப்ரல் 15 முதல் ஜூன் 6 வரை அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங் பகுதிக்கு செல்ல உள்ளனர். இந்தப் பயணத்திற்காக அரசு ரூ. 1.19 கோடியை அனுமதித்துள்ளது.
அதே போன்று 400 மீட்டர் தடகள போட்டி 4 x 100 மீட்டர் போட்டிகளில் பங்கேற்கும் 31 வீரர்கள், 4 பயிற்சியாளர்கள், 5 ஊழியர்கள், ஏப்ரல் 10 முதல் ஜூன் 6 வரை துருக்கி நாட்டின் அண்டாலியா நகரில் பயிற்சி மற்றும் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களது பயணத்திற்கு மத்திய அரசு ரூ.1.57 கோடி அனுமதித்துள்ளது.
மேலும் 18 படகு போட்டி வீரர்கள் மற்றும் வீரங்கனைகள் அடங்கிய இந்திய படகோட்டி குழு, அரசின் முழு செலவில் ஏப்ரல் மாதத்தில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாட்டில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் இதனை தெரிவித்துள்ளார்.